இது
மௌனம்
தூங்கும் நேரம்வானத்தின்
விஸ்வரூபத்தில்- பூக்கள்
நட்சத்திரங்களோடு
மலர்ந்துக் கிடந்தன
அந்த ஏகாந்த
இரவின் குளிர்ச்சியில்
பனித்துகள்கள் போர்வைக்குள்
ஒடுங்கிக்கிடந்தன
கைகளுக்குள்
சிறைப்பட்ட
முழு நிலவில்
மலைகளும்
பள்ளத்தாக்குகளும் -என்
கைகளுக்குள்
அடைப்பட்டுக் கிடந்தன!
தென்றலுக்கு
வியர்த்த நொடியில்
எனது கரங்கள்
அன்னிச்சையாய்
கை குட்டையைப்
பற்றின...
ஒற்றியெடுத்த
வியர்வைத் துளியில்
'நீர்' வெள்ளமாய்
'சூல்' கொண்டிருந்தது.
இரவு
எந்தவித
வெளிச்சமுமின்றி
இருட்டில்
தவித்துக் கிடந்தது!
எனது ஒற்றை
மெழுகுவர்த்தியின்- ஒளியில்
சந்திரன் -பால்
வெண்மையாய் பிரகாசித்தது.
நீண்டு கிடந்த
வெட்டவெளியில்- பாதை
வளைந்து நெளிந்து
தனிமையில்
பிரயாணம் செய்தது...
குளிர் நிறைந்த
குளத்தில்மீன்கள்
மூச்சையடக்கி
நீச்சல் பழகின...
பகலில்
குளிர்தாங்காமல்
'தீ 'மூட்டி
குளிர்காய்ந்த சூரியன்
வெதுவெதுப்பான
தடாகத்தில் -தன்
ஆடைகளைந்து
வெப்பம் -தீர
குளித்து எழுந்தது.
முன்னுக்கு பின்னாய்
முரன்பட்ட கவிதை வரியில்
எனது
எழுத்துக்கள்
காகிதத்தை - கிழித்து
கீழே சிதறி கிடக்கின்றன...
முடிந்தால்
கண்களால்
அள்ளிக்கொள்ளுங்கள்.
6 comments:
கவிவரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரந்து பரவசமூட்டும் மின்மினிகள் போல... சில கற்பனைகள் மிக அழகு. ஆனால் சொற்சிக்கனம் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமோ என்பது எனது எண்ணம்.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் சகோ.
நன்றி வருணன். இது சற்றே பெரிய கவிதை, கொஞ்சம் வித்தியாசமான முயற்சி. பிரபஞ்சத்தில் அடைபடாத இந்த கவிதை சொற்சிக்கனத்திலும் சிக்குவதில்லை.
I am here for the first time. Good post..! My wishes!
நன்றி பிரணவம் ரவிக்குமார் கொச்சுரவி
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
சமுத்ரா தங்களது வாழ்த்திற்கு நன்றி!
Post a Comment