Saturday 30 July 2011

கவிதையை காவு கொடுத்தேன்.





நேற்று ராத்திரி மணி சுமார் மூன்றரை இருக்கும்  தூக்கம் போய்விட்டது. .  மின்சார பேட்டை வைத்துக் கொண்டு முடிந்தளவு கொசு அடித்தேன்.   அப்படியும் தூக்கம் வரும் வழியை காணவில்லை.  எவ்வளவு நேரம்தான் விழித்துக் கொண்டே படுத்து இருப்பது. தமிழ்மனத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து 22ம் தேதிவரை நட்சத்திர  பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் நல்ல பதிவுகளை தரவேண்டுமே அதைப் பற்றி சிந்திக்கலாம் என்று  தீர்மானித்து சிந்தையை கிளர... அங்கு உருப்படியான சங்கதி எதுவுமின்றி சிந்தனை விரிச்சோடி கிடந்தது.


 சரி கட்டுரை வேண்டாம் என்று  கவிதையை பற்றி சிந்திக்கத் தொடங்கினேன். நல்ல ஒரு கவிதை நாலு வரிகளில் வாலை ஆட்டிக் கொண்டு வந்தது.

எழுந்து நோட்டில் குறித்து வைத்துக் கொள்ளலாம் என்றால் எழுந்திருக்க சோம்பேறித்தனமாக இருந்தது.  சரி மனதில் பதிய வைத்துக் கொள்வோம் பிற்பாடு காலையில் எழுந்து நேட்டிலோ அல்லது இணையத்திலோ பதிவு செய்துக் கொள்ளலாம் என்று துணிந்து கவிதையை காவு கொடுக்கத் தீர்மானித்தேன்.

இதோ...மணி அடுத்த நாள் மாலை 8. இதுவரை நேற்று ராத்திரி சிந்தனையில் உதித்த கவிதை வரிகள் இன்னும் நினைவில் வரவில்லை.  நானும் என்னனவோ முயற்சிகள் செய்தும் அந்த நல்ல நாலு வரி வரவில்லை.  கவிதையின் சுருக்கம் இதுதான்.

அது காதல் கவிதை. அவளைப் பற்றி நினைவுகள் வருகின்றன. ஆனால் அவள் வரவில்லை. ஆனால் அங்கு எழும் காலடிச் சத்தம்  அவளைப் போன்றே இருப்பதால் அது அவனை இம்சைக்கின்றன. இதுதான் கரு.

நானும் என்னனோவோ வரிகளை மாற்றி போட்டு பார்க்கிறேன். அந்த ஒரிஜினல் வரிகள் விரவில்லை. அப்படியே தூக்கத்தில் கவிதை கரைந்து போய்விட்டதா என்று தெரியவில்லை.

துனிந்தே எனது கவிதையை காவு கொடுத்துவிட்டேன்.


எனது கவிதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தோன்றினால சொல்லுங்களேன்....?