Friday, 10 May 2013
வெட்டவெளி
Sunday, 14 April 2013
தையா...? சித்திரையா...?
தையா...?
சித்திரையா...?
இன்னும் குழப்பம் தீரவில்லை
தெளிவில்லாத தீர்வால்
தாமறை இலை
தண்ணீராய் இருக்கிறது மனது.
கொண்டாடவும் முடியவில்லை.
குதுகளிக்கவும் வழியில்லை.
எது
சரியென்று
யார்தான் 'சரியாகச்'
சொல்வாரோ...?!
பாரம்பரியமும்
பரிதவிப்பும்
கொண்டதா-எம்
தமிழினம்?
வந்தோரெல்லாம்
தலையில் கை வைக்க
தமிழ் என்ன
தகப்பன் இல்லாத
பிள்ளையா...?
ஆட்சி மாறினால்
வருடப் பிறப்பும் மாறுமா...?
உனக்கு தை
எனக்கு சித்திரையென்று....?
தமிழன் என்ன
எடுப்பார் கைபிள்ளையா...?
என்ன
பிறப்படா நாம்...?
இவர்களிடம்
சிக்கிக்கொண்டோம்
சிந்திக்கத் தெரியாமல்
சிக்கிக்கொண்டோம்.
தையா...?
சித்திரையா...?
எது
சரியென்று
யார்தான் 'சரியாகச்'
சொல்வாரோ...?!
-தோழன் மபா.
14/04/2013.
Wednesday, 3 April 2013
ஆதலினால்....காதலை ரத்து செய்வோம்!
Saturday, 29 December 2012
மலத்தில் ஊறும் சாதி!
Tuesday, 14 February 2012
காதலர் தினக் கவிதை!
கா த ல்
ஆற்றையும் ஆற்றை ஒட்டியுள்ள
மண்ணையும்,
மண்ணில் எழும்பியிருக்கும்
அரசையும்,
அரசை நிர்மாணித்த
அரசனையும்,
அரசனை மேற்பார்வையிடும்
பேரரசையும்,
பேரரசில் குடியிருக்கும்
குடிகளையும்,
அசைக்கும் ஆற்றல் உடையது.
Friday, 3 February 2012
கடிதங்களின் பிணங்கள் !
மிக நீண்டதொரு
இரவு
அதன்
வெளிச்சங்கள்
இருட்டினுல் அமிழ்ந்து
அழுகையை வெளியிட்டன...
இரவின் யாருமற்ற
தெருவெளியில்
குப்பைத் தொட்டிக்கருகில்
அழுகிய பிணங்களாய்
கடிதங்கள்
சிதறிக் கிடக்கின்றன.தனிமையின்இருக்கத்தின்...
சுவர்களெங்கும்
இரத்தச் சிதறல்கள்
எழுத்துகளாய்
காடா விளக்கின்
வெளிச்சத்தில்-இம்முறை
அவன் வெளியே
நின்றிருந்தான்
அவன்
வருவதற்குள்...
கைமணிக்கட்டின்
வழிவந்த
குருதி...
இம்முறை
அவன் கால்களை
நனைக்கட்டும்.
காற்றின் அலைதலில்
பிணவாடை
இன்று
அதிகம்தான்.
-தோழன் மபா
Wednesday, 30 November 2011
துளிர்! (கவிதை )
கட்டறுந்து
கிடக்கிறது
வாழ்க்கை.
வீதியெங்கும்
நினைவுகள்
காலடிச் சுவடுகளாய்
பதிந்து கிடக்கிறது.
காற்று
வீசும்போதெல்லம்
கண்ணில்-நீர்
துளிர்க்கிறது.
கை கோர்த்து...
முகம் பார்த்து...
நெருங்கி நடந்து...
அருகில் அமர்ந்து...
பிரயாணிக்கும்
போது....
மட்டு மீறி
செல்கிறது
நட்பு!
காலங்கள்
திசைகொன்றாய்
பிரிபடும் போது...
மெல்ல
புரிகிறது...
நட்பு
நட்பாய்
மட்டும்
தொடர்வதில்லை!.
-தோழன் மபா
Labels:
எனது கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)




