Sunday, 20 February 2011

மாவீரனின் தாய்



மிழன் இனம்


காக்க செந்நீர் சிந்தி


தன்னுயிர் தந்த


தலைமகனை


தன்னிலிருந்து தந்தவள்-அவள்.




அக்கினி குஞ்சாய்


அடைக்காத்து


அகிலம் காக்கும்


'அமிலமாய்' -தன்


வயிறு குடுவைக்குள்


வைரத்தை வைத்திருந்தாள்.




தவமிருந்து தந்தாள்


தமிழனின்


அருமருந்தாய்


பெற்றெடுத்தாள்.
 
 
எங்கள் தலைவன்


பிரபாகரனை-ஈன்ற


இரும்பு மனுஷி


அம்மா 'பார்வதி'




 
 
 
தனக்கென்று


மகனை


தன்னில் வைக்காமல்


'தமிழீழ' விடுதலைக்காக


தரணிக்குத் தந்தவள்


எங்கள் தாய்.




'மண்ணும் மனமும்


எங்களுக்குச் சொந்தம்


வந்தேரி 'நாயே'


வாலை ஆட்டாமல் போ...'


என்று வீர முழக்கமிட்ட


மாவீரனின் தாய்!




"பார்த்துப் போப்பா...


பார்த்து வாப்பா..." என்று


பிற தாய்மார்கள் தங்கள்


பிள்ளைகள் மேல்


பாசம் பொழிவார்கள்.


பதறித் துடிப்பார்கள்.




இவள் பெற்றதை -இன


விடுதலைக்கு தந்தாள்


பாசத்தை- தன்


இதயத்தில் வைத்தாள்.






இதயத்தை


இரும்பாக்கிக் கொண்டு


இரங்கற் 'பா' பாடுகிறேன்...


 
பட்டதுயரம்


போதுமென்று


இறந்தாயோ...


 
அம்மா...




பாவி இவர்களை


நம்பினால்




கெட்டக்குடி


இன்னும் கெடுமடி


என்று பறந்தாயோ!


 இல்லை...




விடுதலை இன்னும்


விடியவில்லை


வேலிக்குள் வாழ்வு


சகிக்கவில்லை




தமிழன் தலை நிமிர



தன்னுயிர் தந்தவனை



மீண்டும் தன்னில்



சுமந்துவர



சென்றாயோ...






அம்மா எங்கள்


அம்மா


மாவீரர்களின் 'தாயே'






நீ


மீண்டும்


உயிர்த்தெழும் போது


உன் கருவறை


'மாவீரன் பிரபாகரனை'


மீண்டும் சுமக்கட்டும்!!!













No comments: