Sunday 23 January 2011

அவளி'டம்' விற்பனைக்கு




  •  








புழுதி படர்ந்த  -அந்த
ஒற்றையடிப் பாதையில்
மலைகலெனத்- தன்
மார்புத் திறந்து -பல
யுகங்களாக -அவள்
படுத்திருந்தாள்.



கசிந்து ஒழுகிய
முலை காம்புகளில் 
வியர்வை அரும்பி
உப்புப் பூத்திருந்தது,
கால்களின் இடுக்குகளில்
மனித கைகளின் 
'ரேகைகள்'
அழுக்குப் படிந்து
அப்பியிருந்தன...
 

விலை கூவி... 
விற்க -அவள்
சம்மதம் தேவையில்லை
என்றானபோது...

நாயும் புணர்ந்தது...
நரியும் புணர்ந்தது...
 

காப்பாற்றுவார் யருமின்றி
அவள் உடல்கள் எங்கும்
எல்லைகள் பிரிக்கப்பட்டு
வேலியிடப்படிருக்கின்றன....
விலையும்
குறிக்கப்பட்டிருக்கின்றன.
 

முக்கி முனகினாலும்
கதறி அழுதாலும்
காலை குறுக்கி
'குறி'
காட்டமறுத்தாலும்

வன்புணர்வுச் செய்து-அவளின்
சதை  விற்றான்
'ரியல்' மனிதன்!?


செழுமை பூத்து
விளைந்திருந்தாலும் -எங்கோ
வனாந்திரத்தில் மறைந்திருந்தாலும்
அவனின் கண்பட்டுவிட்டால்...
அங்கே முளைத்திருக்கும்
ஒரு அடுக்குமாடி
குடியிருப்பு!



இனி அவள்
விளை நிலங்களா
இல்லை
விலை நிலங்களா? 

 
அவள் 
எங்கேயாவது 
தனிமையில் - தனது
ஆடைகளைக் களைந்து
விஸ்தாரமாக -
படுத்துக்கிடந்தால்...




அடுத்த நாள்
பத்திரிகைகளில்
அரைப்பக்கம்  விளம்பரம்
'இடம் விற்பனைக்கு'
என்று...!?



****

3 comments:

SelvamJilla said...

thala unga kavithai romba super. vilai nelagalai neeinga pesum vitham superooooooo super.

Thanks,
alanselvam
www.facebook.com/alanselvam
http://alanselvam.blogspot.com/

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தினம் தினம் பூமி அன்னையை கூர்ப்போட்டு விற்கும் கயவர்களைக் கண்டு கொதித்து எழுதியதுதான் இந்த கவிதை. பாராட்டுக்கு நன்றி செல்வம் !

வளவன் said...

கவிதையின் நயமும்
சமூக பொறுப்பும்
குடுக்க வேண்டிய நியாமான விலை ...