Tuesday 28 December 2010

காதல் கானா...

 காதல் கானா...

கண்ண தொறந்து பாக்கசொல;


காலையில பத்துமணி...

காதாண்ட கத்திகினேகீரா;

...ஏன் ஊட்டுக்காரி...



இன்னாத்துக்கு கூவுறன்னு

உட்டேன் ஒன்னு லெப்ட்டுல...

ங்கொம்மால உருள கெயங்கு மாறி

வீங்கிகிச்சி கயித்துல...



வழிச்சி வழிச்சி ஊத்துனா பாரு;

வாய் கீயிர வரைக்கும்...

அவ சொன்னதெல்லாம் கேட்டீங்கோ?

ஒங்க காது நொறைக்கும்...



மொறச்சி மொறச்சி பாத்துகினே

வீட்டுக்குள்ள வந்தா...

மொனவிகிட்டே வேலையெல்லாம்

ஈத்து போட்டு செஞ்சா...



பண்ணுனது தப்புன்னு;

அப்பாலதான் புரிஞ்சிது...

பொண்டாடிக்கு பூ வாங்க

மன்சு ரொம்ப துடிச்சுது...



மல்லிய பூவும் அல்வாவும் - என்

மல்கோவாவுக்கு வாங்கிக்கினு...

மாலை நேரத்துல

மன்மத ராகம் பாடிகினு...



வேலை முடிஞ்சதும்

வீட்டுக்கு போயி பாத்தா?

விட்டத்துல தொங்கிபுட்டா

வீட்டுக்காரி சீதா...



ஒன்னியும் இல்லாத பிரச்சனைக்கா

உசுர உட்ட பாவி?

ங்கோத்தா உன்ன தேடி வரும் பாரு

என்னோட ஆவி...



பொண்டாட்டிய அடிக்காத...

சந்தேகத்துல துடிக்காத...

பின்னால போயி பாக்காத...

பேச்ச ஓட்டு கேக்காத...

முழுசா அவள நம்பு...

முடியலன்னா?

என்ன மாறி தொங்கு...

-சுவாமிநாதன்
சோழியவிளாகம்

3 comments:

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

சிவகுமாரன் said...

மனைவியை சந்தேகப்படுபவர்களுக்கு நல்ல பாடம். சென்னைத் தமிழ் ரசிக்கும் விதம் உள்ளது.

mohamedali jinnah said...

அருமை . காதல் கானா...வுக்கு வாழ்த்துகள்
கானா-என்றால் என்ன!
கானாவின் சால்னா சுவை அருமை