Friday 12 February 2010

காசி ஆனந்தனின் ஹைக்கூ க(வி)தைகள்!




காசி ஆனந்தன் - ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவர். ஈசாப் கதைகள் பாணியில் கவிஞர் எழுதியுள்ள இந்தக் கதைகள் வித்யாசமானவை. ஹைக்கூ கதைகளா? என்று திகைக்காதீர் ஒவ்வொன்றும் ஒரு வைரம். 1994ம் வருடம் இக் கவிதை ' சுபமங்களா'வில் வெளிவந்தது.

உரிமை:

மழை
தவளைகள் மகிழ்ச்சியோடு உரக்க குரலெழுப்பின.

குளத்தில் இருந்த ஆமை தவளைகளைப் பார்த்துச் சொன்னது:-

'இப்படி கத்துகிறீர்களே - உங்கள் குரலைக் கேட்டுப் பாம்பு
உங்க்ளைப் பிடித்துவிட்டால் உங்கள் நிலை என்ன ஆவது?'

தவளைகள் சிரித்தன,

'நாங்கள் கொஞ்சமும் கவலைப்பட மாட்டோம் என்றது'
கூட்டத்தில் ஒரு தவளை.

இனோரு தவளை சொன்னது
'மூச்சை இழக்கலாம் - பேச்சை இழக்கலாமா?'


**********

நடப்பு:

சேவல் கூவியது.

'நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு
வாழ்த்துகிறது....' என்று கதிரவன் பூரித்துப் போனான்.

மாலை வந்தது.
கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான்.

சாயும் போது...

'நான் விழுகிறேனே...என்னைத் தாங்க யாருமே வரமாட்டார்களா' என்று ஏங்கினான்.

சேவலை அவன் எதிர்ப்பார்த்தான்.
வரவில்லை.
விழுந்துக்கொண்டே கதிரவன் சொன்னான்:-

'எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை'


*********




சண்டித்தனம்:

'எல்லொரையும் அடித்து நொறுக்குவேன்...'

இடியோசையோடு சண்டித்தனத்தில் இறங்கியது மின்னல்.

ஒரு நொடிதான்...

வளைந்து நொறுங்கி அது முறிந்து விழுந்தது.

மண்ணில் இருந்தபடியே மின்னலின் சண்டித்தனத்தையும் விழ்ச்சியையும்
பார்த்த தவளை சொன்னது.

'சண்டியாய் எழுவான்
நொண்டியாய் விழுவான்'


******

தேவை:

புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.

மரத்தில் இருந்த குருவிக்குஞ்சு தாயைக் கேட்டது:-

'ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு இல்லை?'

தாய்க்குருவி சிரித்தது.

'மாட்டுக்கு நம்மைப்போல் சிறகு தோவையில்லை' என்றது தாய்.

தாய்குருவி சொன்னது:-

'வானத்தில் புல் முளைத்தால் மாட்டுக்கும் சிறகு முளைக்கும்'.

4 comments:

Unknown said...

நண்பர்க்கு வணக்கம் ..
கவிதை என்பது கடல்..
இதில் இதமான பயண அனுபவத்தை
கொடுத்த உங்கள் படைப்புக்கு


மென்மேலும் உயர

--

அன்புடன்
ச.மகேஷ்

Unknown said...

நண்பர்க்கு வணக்கம் ..
கவிதை என்பது கடல்..
இதில் இதமான பயண அனுபவத்தை
கொடுத்த உங்கள் BLOG க்கு நன்றி


மென்மேலும் உயர வாழ்த்துக்கள்...

--

அன்புடன்
ச.மகேஷ்

Kandumany Veluppillai Rudra said...

அண்ணன் காசியின் கவிதைகள்,
என்றும் சோடை போனதில்லை,
பதிவு செய்த உங்களுக்கு,
பாராட்டும்,நன்றிகளும்

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நன்றி உருத்திரா தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.