Friday 13 September 2013

விநாயகரின் கதறல்!



சாமிதானே நானு
என்னை ஏண்டா
சமுத்திரத்தில
கரைக்கிற...?

வண்டியில ஏத்துற
ஊரச் சுத்துற
சாஸ்த்திரமுன்னு சொல்லி
என்னை சாகடிக்கிற...

கும்பிட்ட சாமிய
குட்டையில குழப்பற...
நம்பியிருந்த என்னை
நட்டாத்தில கரைக்கிற...

எங்கயோ செஞ்சத
இங்கேயும் செய்யற...
இங்கே இல்லாதத
ஏண்டா செய்யிற...?

பூதமாடா நானு
என்னை ஏண்டா
இப்படி
போட்டு உடைக்கிற...?

சாமிதானே நானு
ஏதுக்கடா
என் கண்ண குத்துற...?

இனி...
நீ
கும்பிடாத
நான்
கும்பிடுறேன்
என்னை விட்டுடு!


-தோழன் மபா

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதனால் எத்தனை பண விரயம், சச்சரவுகள், சுற்றுப்புற கேடுகள்.... ம்...

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நான் விநாயகர் சதுர்த்திக்கு புதிதாக விநாயகர் சிலை வாங்குவதேயில்லை. கும்பிட்டபின் அதை எங்கே தூக்கியெரிய வேண்டும் என்ற கவலை வேறு நம்மை ஆட்கொண்டுவிடும். அதனால் வீட்டில் இருக்கும் விநாயகரை கும்பிடுவதோடு சரி!