தையா...?
சித்திரையா...?
இன்னும் குழப்பம் தீரவில்லை
தெளிவில்லாத தீர்வால்
தாமறை இலை
தண்ணீராய் இருக்கிறது மனது.
கொண்டாடவும் முடியவில்லை.
குதுகளிக்கவும் வழியில்லை.
எது
சரியென்று
யார்தான் 'சரியாகச்'
சொல்வாரோ...?!
பாரம்பரியமும்
பரிதவிப்பும்
கொண்டதா-எம்
தமிழினம்?
வந்தோரெல்லாம்
தலையில் கை வைக்க
தமிழ் என்ன
தகப்பன் இல்லாத
பிள்ளையா...?
ஆட்சி மாறினால்
வருடப் பிறப்பும் மாறுமா...?
உனக்கு தை
எனக்கு சித்திரையென்று....?
தமிழன் என்ன
எடுப்பார் கைபிள்ளையா...?
என்ன
பிறப்படா நாம்...?
இவர்களிடம்
சிக்கிக்கொண்டோம்
சிந்திக்கத் தெரியாமல்
சிக்கிக்கொண்டோம்.
தையா...?
சித்திரையா...?
எது
சரியென்று
யார்தான் 'சரியாகச்'
சொல்வாரோ...?!
-தோழன் மபா.
14/04/2013.
2 comments:
கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அறிவியல் அடிப்படையிலும் மொழி அடிப்படையிலும் ஒன்றல இரண்டல்ல பல்லாயிரத்தாண்டாய் தை 1 ஒன்றே தமிழர் புத்தாண்டு என்கிறார் இனமான பாவலர் பாவேந்தர் அதற்க்கு முன்னதாகவே அப்பாதுரையார் உட்பட மிகசிச்றந்த அறிஞ்சர் பெருமக்கள் இதையே உறுதி செய்து உள்ளனர் எனவே தை 1 மட்டுமே தமிழரின் புத்தாண்டு . இது அறிவியல் அடிப்படையிலனதும் கூட உங்களின் ஆதங்கம் உண்மையானது தான் .
Post a Comment