- 1997ம் வருடம் செப்டம்பர் 6ம் தேதி, அன்னை தெரசாவின் இறப்புச் செய்தி உலகை கலங்கடித்த நேரம். அப்போது நான் தினபூமியில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன், அன்னையின் மறைவு என்னையும் தாக்கியது. அன்னையின் மறைவுக்காக நான் எழுதிய கவிதைதான் இது. செப்டம்பர் 13ம் தேதி அன்று, தினபூமி நாளிதழில் முதல் பக்கத்தில் இக் கவிதை வெளிவந்தது.
திக்கற்றவர்களின் தெய்வம்
"அன்னை தெரசா"
எதுவுமற்ற இருட்டில்
தனித்து விடப்பட்ட
உலகில்
உன் வருகை
சூரியனாய் பிரகாசித்தது
நலிந்த கைகளில்
வலிமை வாய்ந்த-உன்
அன்பு...
நிறப் பாகுபாடுகளைக்
கடந்து...
மனித நேயத்தின்
மகத்துவத்தை -உலகிற்கு
உணர்த்தின,
முகவரி அற்ற
மனிதர்களின்
முகவரியாய் -நீ
மாறிய பிறகு
மாற்றம்
மற்றவர்களிடமும்
ஏற்பட்டது
திக்கற்றவர்களுக்கு
நாமும்
துணை என்று !
உன் பயணம்
தொடங்கிவிட்ட வேளையில்
மொளனக் கதறலோடு
நாங்களும்
பின் தொடர்கிறோம்
நீ
ஒளியாய் பிரகாசித்து
மெழுகாய் உருகிவிட்டாயே!
உலக விழிகளின்
கண்ணீர் -உனது
காலடியில்
எங்கள் அன்னையே !
நீ
மீண்டும்
வருவாய்தானே...?
"தேவதூதர்கள்
மீண்டும்
உயிர்த்தெழுவார்கள்"
Sunday, 7 February 2010
திக்கற்றவர்களின் தெய்வம் -"அன்னை தெரசா"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment