கவிதை வீதி
'விட்டு விடுதலை யாகிநிற் பாய் இந்தச் சிட்டுக் குருவியைப்போலே...' -மகாகவி பாரதி
Tuesday, 24 September 2013
"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....?"
Friday, 13 September 2013
விநாயகரின் கதறல்!
சாமிதானே நானு
என்னை ஏண்டா
சமுத்திரத்தில
கரைக்கிற...?
வண்டியில ஏத்துற
ஊரச் சுத்துற
சாஸ்த்திரமுன்னு சொல்லி
என்னை சாகடிக்கிற...
கும்பிட்ட சாமிய
குட்டையில குழப்பற...
நம்பியிருந்த என்னை
நட்டாத்தில கரைக்கிற...
எங்கயோ செஞ்சத
இங்கேயும் செய்யற...
இங்கே இல்லாதத
ஏண்டா செய்யிற...?
பூதமாடா நானு
என்னை ஏண்டா
இப்படி
போட்டு உடைக்கிற...?
சாமிதானே நானு
ஏதுக்கடா
என் கண்ண குத்துற...?
இனி...
நீ
கும்பிடாத
நான்
கும்பிடுறேன்
என்னை விட்டுடு!
-தோழன் மபா
Friday, 23 August 2013
பசியடங்கா மனிதன்!
நீ
நேற்றுவரை
துள்ளித் திரிந்திருப்பாய்.
ஓடி
விளையாடியிருப்பாய்.
மிட்டாய்க்காக
முகம் மலர்ந்திருப்பாய்.
இன்றுன்னை
கொன்றதாரென்று
அறிந்திருப்பாயா....?
ரசாயனக் குண்றென்றார்
விஷவாயுவென்றார்.
அரசு ராணுவமென்றார்
கிளர்ச்சியாளர் கூட்டமென்றார்
கொன்றது
எப்படியாயினும்
யாராகினும்
கொல்லப்பட்டது
நீதானே....?
மனிதன் தின்ற
மழலைகள்
மாமிசம்
என்றேன்
நான்.
இன்னும்
பசியடங்கா
மனிதன் -இருந்தால்
வரலாம்
சிரியாவுக்கு!
-தோழன் மபா.
சிரியா டாமஸ்கசில் அரசு ராணுவத்தினரால் விஷ வாயு குண்டு வீசிக் கொல்லப்பட்ட மழலைகள். இத் தாக்குதலில் சுமார் 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். விடியற்காலையில் இத் தாக்குதல் நடந்துள்ளதால் எல்லோரும் படுக்கையிலே பிணமாயினர்.
Saturday, 10 August 2013
Friday, 10 May 2013
வெட்டவெளி
Sunday, 14 April 2013
தையா...? சித்திரையா...?
தையா...?
சித்திரையா...?
இன்னும் குழப்பம் தீரவில்லை
தெளிவில்லாத தீர்வால்
தாமறை இலை
தண்ணீராய் இருக்கிறது மனது.
கொண்டாடவும் முடியவில்லை.
குதுகளிக்கவும் வழியில்லை.
எது
சரியென்று
யார்தான் 'சரியாகச்'
சொல்வாரோ...?!
பாரம்பரியமும்
பரிதவிப்பும்
கொண்டதா-எம்
தமிழினம்?
வந்தோரெல்லாம்
தலையில் கை வைக்க
தமிழ் என்ன
தகப்பன் இல்லாத
பிள்ளையா...?
ஆட்சி மாறினால்
வருடப் பிறப்பும் மாறுமா...?
உனக்கு தை
எனக்கு சித்திரையென்று....?
தமிழன் என்ன
எடுப்பார் கைபிள்ளையா...?
என்ன
பிறப்படா நாம்...?
இவர்களிடம்
சிக்கிக்கொண்டோம்
சிந்திக்கத் தெரியாமல்
சிக்கிக்கொண்டோம்.
தையா...?
சித்திரையா...?
எது
சரியென்று
யார்தான் 'சரியாகச்'
சொல்வாரோ...?!
-தோழன் மபா.
14/04/2013.
Wednesday, 3 April 2013
ஆதலினால்....காதலை ரத்து செய்வோம்!
Subscribe to:
Posts (Atom)